Monday, February 09, 2026
Logo
Menu
Follow Us
அழகு குறிப்புகள்

டூத் பேஸ்ட் யூஸ் பண்ணி பளபளக்கும் சருமத்தை சுலபமாக பெறலாம், எப்படி தெரியுமா?

A
Admin User
Journalist
April 21, 2022 1 min read 27 views
டூத் பேஸ்ட் யூஸ் பண்ணி பளபளக்கும் சருமத்தை சுலபமாக பெறலாம், எப்படி தெரியுமா?

கோடைகாலம் என்றாலே வெயிலில் இருந்து சருமத்தை எப்படி காப்பது என்று தான் பெண்கள் அனைவரின் மனதில் தோன்றிடும். கோடைகாலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் சரும கருமை, முகப்பரு, ப்ளாக்ஹெட்ஸ் போன்ற பிரச்சனைகள் பரவலாக உண்டாகக்கூடும். இதற்காக நாம் அடிக்கடி பார்லர் செல்ல வேண்டும் என்பதில்லை. நம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே சருமத்தை பராமரிப்பது தான் எந்த பக்கவிளைவும் அற்ற அற்புதமான வழிமுறை. அப்படிப்பட்ட வழி ஒன்றை தான் உங்களுக்கு சொல்ல போகிறேன்.

யார் வீட்டில் தான் பேஸ்ட் இருக்காது? தினமும் பற்களை துலக்க பற்பசை எனும் பேஸ்டை நாம் பயன்படுத்துகிறோம். பற்களை வெண்மையாக்கும் பேஸ்டை கொண்டு உங்கள் சருமத்தை அழகாக்க முடியும் என்றால் அதை ஏன் முயற்சிக்க கூடாது. உங்களுக்கு இதைப் பற்றி எந்த கருத்தும் இல்லையென்றால், இங்கே கூறப்பட்டுள்ள படி உபயோகித்து பாருங்கள், நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும். சரி வாருங்கள், இப்போது பேஸ்டை சருமத்திற்கு எப்படி பயன்படுத்தலாம் என்பதைப் பற்றி இந்த கட்டுரையில் தெரிந்து கொள்வோம்…

முகம் பிரகாசிக்கும்
முதலில் வெள்ளை நிற பேஸ்டை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த பேஸ்டில் உடனடி பிரகாசத்தைக் கொடுக்க உதவும் வெண்மையாக்கும் காரணிகள் உள்ளன. ஒரு சிறு கிண்ணத்தில் சிறிது பேஸ்டை எடுத்து கொள்ளவும். அத்துடன் ஒரு டீஸ்பூன் தேன் மற்றும் சிறிது ரோஸ் வாட்டர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இப்போது இந்த கலவையை முகத்தில் அல்லது கை, கால் சருமங்களில் சமமாக தடவி 10 நிமிடங்கள் அப்படியே விடவும். பின்னர் குளிர்ந்த நீரில் கழுவிடவும். இறுதியாக, மாய்ஸ்சரைசர் மற்றும் சன்ஸ்கிரீனைப் பயன்படுத்த மறக்காதீர்கள்.

முகப்பருவைப் போக்கிடும்
மாதவிடாய் காலங்களில் அல்லது ஹார்மோன் மாற்றங்களால் அல்லது மாசடைந்த காற்று காரணமாக பெண்களுக்கு முகத்தில் பருக்கள் ஏற்படுவது பொதுவானது. இருப்பினும், இது பெரும்பாலும் தூசியிலிருந்தும் ஏற்படுகிறது. இதற்கு சிறு பட்டாணி அளவிலான பேஸ்டை ஆள்காட்டி விரலில் எடுத்து முகப்பரு உள்ள இடத்தில் தடவி இரவு முழுவதும் உலர விடவும். காலையில் எழுந்து கழுவும்போது பருக்களின் அளவு கணிசமாகக் குறைந்திடும். தொடர்ந்து செய்து வர சில நாட்களிலேயே அது மறைந்துவிடும்.

கரும்புள்ளிகளை அகற்றிடும்
உங்கள் முகத்தில் இருக்கக்கூடிய கரும்புள்ளிகள் எனும் பிளாக்ஹெட்ஸை அகற்ற பேஸ்ட் தாராளமாக பயன்படுத்தலாம். பேஸ்டைப் பயன்படுத்துவதன் மூலம் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் அனைத்தும் நீங்கி முகம் பிரகாசிக்கும். எனவே, இனிமேல் பிளாக்ஹெட்ஸை போக்க பார்லர் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது.

VINCENT CHASE EYEWEAR By Lenskart | Full Rim Round Sunglasses| Polarized And 100% UV Protected | Men & Women
Recommended for You
VINCENT CHASE EYEWEAR By Lenskart | Full Rim Round Sunglasses| Polarized And 100% UV Protected | Men & Women

Share this article
A
Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

...

உடல் எடை கணக்கீடு

ஆரோக்கியமான வாழ்விற்கு உங்கள் பிஎம்ஐ (BMI) அளவை அறிந்து கொள்வது அவசியம்.

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

...

...

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹14,556
தங்கம் (24k)
1 கிராம்
₹15,879
வெள்ளி
1 கிராம்
₹274
அடுத்த பண்டிகை (Next Festival)

தேடல்...

00
Days to go
உங்கள் கருத்து (Poll)

மன அழுத்தத்தைக் குறைக்க நீங்கள் என்ன செய்கிறீர்கள்?

Get Daily Updates

Subscribe for the latest news in your inbox.

அடுத்து வாசிக்க
பொதுவான முடி பராமரிப்பு தவறுகள்: ஆரோக்கியமான கூந்தலுக்கு அவற்றை சரிசெய்வது எப்படி?
வாசிக்க